இன்றைய தேதிக்கு வலைபூக்கள் எழுத எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை, எந்த தகுதியும் தேவையில்லை, இந்த இரண்டு முக்கிய தகுதிகளின் அடிப்படையில் இந்த 'வலைபூ' ஆரம்பிக்க படுகிறது.
இதில் இந்தியாவின் மிக முக்கிய அரசியல் பிரச்சனைகளில் இருந்து, காதல் பண்ணுவது, சினிமா உட்பட, பொருளாதாரம் வரை பல பிரச்சனைகள் பற்றி கருத்து சொல்லப்படும், தமிழில் உள்ள "@#த்தா" ரகமான மிக சில கலைசொற்களை பயன்படுத்தாமல், காரணங்கள் கேட்டால் விளக்கம் தரப்படும்.
மிக சுலபமாக யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லகூடிய விஷயங்கள் "சினிமா மற்றும் அரசியல்", இதிலும் 'எந்த தகுதியும் தேவையில்லை' என்கிற தகுதி இருப்பதால், நாம் அதில் அதிக கவனம் செலுத்துகிறோம், அவ்வளவுதான், மற்றபடி இது தான் வரும், மற்ற செய்திகள் வராது என யாரும் மகிழ்ச்சி அடையவேண்டாம்.
இந்த வலைப்பூவில் இன்னின்ன விஷயங்கள் வரும், அதில் சமுக நலன், மனித நலன் மற்றும் தேச நலன் இருக்கும் , இல்லை ஒரு மாதிரியான "டி கடை பென்ச்" தனமாக இருக்கும் என்று எந்த ஒரு உத்தரவாதமும் தர முடியாது.
இது எந்த மாதிரியான வலைப்பூ என்பது எனக்கே தெரியாது.
"சினிமா மற்றும் அரசியல்" விஷயங்கள் விவாதிக்க வேண்டும், அனால் அதில் ஒரு தீவிர நிலைப்பாடு எடுக்காமல் இருப்பது தான் ரொம்ப வசதியானது.
"அரசியல் மற்றும் சினிமா " - நேரவிரயம் என்று நினைப்பவர்கள் பின் தொடர வேண்டாம்.
இப்படிக்கு
'அப்பாவி இந்தியன்' அன்புசெல்வன்.
vazhthugal Appavi Indianuku!
ReplyDelete